திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தற்போதைக்கு மாஸ்டர் வெளியாகாது: தயாரிப்பாளர்

Share it:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்று பிப்ரவரி இறுதியில் பட வேலைகள் நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. 



கொரோனா பரவலால் நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மாஸ்டர் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. 6 மாத காலமாகியும் திரையரங்குகள் திறக்கப்படாததால் நஷ்டத்தை தவிர்க்க ஓடிடியில் மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் நிச்சயம் ஓடிடியில் வெளியாகாது என தெரிவித்தார்.

இந்நிலையில் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும், தமிழகத்தில் திரையரங்குகளைத் திறப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. அதனையடுத்து, தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கவேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்களும், திரைபடத்துறையினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துவந்தன.

இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தற்போதைக்கு மாஸ்டர் மாதிரியான பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். 

மாஸ்டர் மாதிரியான பெரிய பட்ஜெட் படங்களை திரையிட்டால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவார்கள் என்றும், தற்போது நிலவும் சூழலில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டால் மட்டுமே சிறிதளவு லாபம் ஈட்ட முடியும் என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.


Share it:
Next
Newer Post
Previous
This is the last post.

Cinema News

Kollywood (Tamil Cinema) News

Master Movie

Tamil

Tamil Cinema News

Vijay

Post A Comment: