தங்களின் திருமண விழாவுக்கு தனக்கு பிடித்த நடிகரின் படத்தை போட்டு கட் -அவுட் வைப்பதையும், பேனர் வைப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். சம்பந்தப்பட்ட நடிகரின் கவனத்திற்கு இது போகாது என்றும் தெரிந்தும், தனது மனநிறைவுக்காக அப்படி செய்து வருகின்றார்கள். திருமண அழைப்பிதழிலும் கூட பிடித்த நடிகரின் புகைப்படத்தினை அச்சிட்டு வருகின்றார்கள்.
அப்படி அடிக்கும் அழைப்பிதழை ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் , நடிகருக்கு அனுப்பி வைப்பதுண்டு. பெரும்பாலும் அந்த அழைப்பிதழ்களை நடிகர்கள் கவனிப்பதில்லை. கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் அதைப்பார்த்து ரெஸ்பான்ஸ் செய்தால் உண்டு.
ஆனால், நடிகர் தனுஷ் இதில் விதிவிலக்கு. தனக்கு வரும் ரசிகர்களின் திருமண அழைப்பிதழ்களை படித்துப்பார்த்து, அவர்களுக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்புகிறார். அவர் அழைப்பிதழை படிக்கும் படங்களையும் வலைத்தளத்தில் பகிர்கிறார்.
இதைப்பார்க்கும் தனுஷ் ரசிகர்கள், கொண்டாடித்தீர்க்கிறார்கள்.
Post A Comment: