மாலத்தீவில் சமந்தாவின் அசத்தல் புகைப்படங்கள்...!

Share it:

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் சென்றதை அடுத்து நடிகைகள் பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் ப்ரீத்தி சிங் உள்பட ஒரு சில நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.மாலத்தீவுக்கு சென்றுள்ள நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களும் மாலத்தீவில் கொட்டிக்கிடக்கும் அழகையும் புகைப்படங்களாக பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது நாமே மாலத்தீவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் ஏற்படுகிறது.

மேலும் மாலத்தீவு சுற்றுலா துறையினர் தான் தமிழ் நடிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர்களது அழைப்பின் பெயரில் தான் ஒரு சில நடிகைகள் அங்கு சென்றுள்ளதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாலத்தீவு செல்லும் நடிகைகளின் பட்டியலில் சமந்தாவும் இணைந்துள்ளார். இன்று பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் கடலின் அழகை நின்று ரசிப்பது போல ஒரு புகைப்படமும், ஸ்கூபா டைவிங்கிற்கு தயாராகும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் ரசிகர்களின் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share it:

Celebrity News

Kollywood (Tamil Cinema) News

Samantha

Tamil Cinema News

Tour

Post A Comment: