கட்சி தொடங்குவது குறித்து....ஆலோசனைக்கு பின் ரஜினியின் முடிவு என்ன?

Share it:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் இந்த ஆலோசனைக்கு பின் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ’அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன்’ என்று கூறியுள்ளார். மேலும் ’நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகளும் கூறியுள்ளனர் என தெரிவித்தார்.

முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் ரஜினியின் தற்போதைய உடல் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ரஜினி உடனடியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இதனை அடுத்து புதிய கட்சி தொடங்குவது, அரசியலுக்கு வருவது குறித்து இன்று அல்லது நாளை அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Share it:

Celebrity News

Kollywood

Politics

rajini

Rajinikanth

Post A Comment: