பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் விசாரணையை கையிலெடுத்த ஆர்.டி.ஓ...!

Share it:

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி, நசரத்பேட்டையில் உள்ள சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் சித்ராவின் உறவினர்களும் பெற்றோர்களும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டது.சித்ராவுடன் அறையில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத்திடம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பதிவு திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யா விசாரணையை கையிலெடுத்துள்ளார்.


சித்ராவின் தற்கொலைக்கு தாயார் விஜயா மற்றும் கணவர் ஹேம்நாத் கொடுத்த மன அழுத்தமே காரணம் என விசாரணையில் தெரிய வந்ததால், தற்போது சித்ரா தந்தை காமராஜர் மற்றும் தாயார் விஜயாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்ரா கடைசியாக விஜயாவிடம் என்ன பேசினார்? என்பது குறித்து கேள்விகள் கேட்கப்படுவதாக தெரிகிறது.

Share it:

Celebrity News

Tamil

Post A Comment: