வெளியானது ஈஸ்வரன் படத்தின் வீடியோ – கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்...!

Share it:

சுசீந்தரன் இயக்கத்தில் , சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். பழனி பின்னணியில் கதைக்களம் கொண்டுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பால சரவணன், முனீஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசை அமைக்கிறார்.இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையைக் குறைத்து படு ஸ்லிமாகி இருக்கிறார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் லிரிக்கல் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் முதல் பாடலாக, தமிழன் பாட்டு இன்று காலையும், லிரிக்கல் வீடியோ மாலை 4 மணிக்கும் வெளியிடப்பட்டது. ’நாடே கிடுகிடுக்க’ என தொடங்கும் இந்தப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share it:

Cinema News

Eeswaran Movie

Kollywood

Kollywood (Tamil Cinema) News

Poster

Silambarasan

Simbu

STR

Tamil

Tamil Cinema News

Video

Post A Comment: