தமிழ் திரையுலகில் எத்தனை ஸ்டார்கள் வந்தாலும் முதலடி எடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான்.
”சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குலத்தையும் சொல்லும்…”’என்ற பாடலுக்கு ஏற்ப சூப்பர்ஸ்டார் அனைவரது மனதிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்து கவர்ந்தவர். கடந்த 12 ஆம் தேதி தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த், மறுநாளே தான் தற்போது ஒப்பந்தமாகியுள்ள அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் புறப்பட்டார்.
அண்ணாத்த படப்பிடிப்புக்கு செல்லும் வழியில்,
— Satheesh (@Satheesh_2017) December 13, 2020
விமானத்தில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய தலைவர் #ரஜினிகாந்த்
தலைவரோட அந்த புன்னகை ப்பா... - தலைவா 😍🙏
"பொன்னோடு மண் எல்லாம் போனாலும்
அவர் புன்னகையை கொள்ளையிட முடியாது" pic.twitter.com/sFVYL61y1M
இந்நிலையில் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ரஜினிகாந்த் கேக் வெட்டினார். உடன் இருந்தவர்கள் பிறந்தநாள் பாட்டுப்பாட விமானத்திலேயே பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டது. இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Post A Comment: