‘அவன் இவன்’ படத்திற்கு பின் விஷால், ஆர்யா இணையும் பட டைட்டில்...!

Share it:

 நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஆனந்த்ஷங்கர் இயக்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்திற்கு பின் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷாலின் 30வது படமாகவும், ஆர்யாவின் 32வது படமாகவும் உருவாகி வரும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு விஷால், ஆர்யா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கவுள்ளனர்.

Share it:

Arya

Celebrity News

Cinema News

Kollywood (Tamil Cinema) News

Tamil Cinema News

Vishal

Post A Comment: